பேராவூரணி, நாட்டாணிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இயங்கி வரும் மழலையர் பள்ளிக்கு மெகா பவுண்டேஷன் சார்பில் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மரத்தினால் செய்யப்பட்ட மணிச் சட்டம், தமிழ், ஆங்கில எழுத்துக்கள், வண்ணங்களை அடையாளப்படுத்துதல், உடல் உறுப்புகளை அறிந்து கொள்ளுதல், நல்லொழுக்கங்களை கற்றுக் கொள்ளுதல், எண்களை அறிந்து கொள்ளுதல், வடிவங்களை வகைப்படுத்துதல், பழங்கள், பறவைகள் பற்றி தெரிந்து கொள்ளுதல் என கற்றலை விளையாட்டாய் மாற்றி இருக்கிறது மெகா பவுண்டேஷன்.
சுமார் 15,000 மதிப்புள்ள விளையாட்டுப் பொருட்களை மெகா பவுண்டேஷன் பொறுப்பாளர் நிமல் ராகவன் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் திருஞானம், பள்ளி மேலாண்மை குழு தலைவி பார்கவி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வீராச்சாமி, மெய்ச்சுடர் ஆசிரியர் நா வெங்கடேசன், தமிழ் வழிக் கல்வி இயக்க பொறுப்பாளர் த.பழனிவேல், ஆசிரியர்கள் கலியமூர்த்தி, உஷா தேவி, தாமரைச்செல்வி, கரோலின் ஆரோக்கிய மேரி, வேளாங்கண்ணி ஞான திரவியம், மகேஸ்வரி, மழலையர் பிரிவு ஆசிரியர் மைமூன் சுலைக்கால் ஆகியோர் கலந்து கொண்டனர்.