கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன் சங்கம் மற்றும் சரவணா கேட்டரிங் இணைந்து பேராவூரணி காமராஜர் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு 250 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது . நிகழ்வுக்கு, சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார், சாசனத் தலைவர் எம் நீலகண்டன், வட்டாரத் தலைவர் எஸ். பாண்டியராஜன், மாவட்டத் தலைவர் கே.இளங்கோ, முன்னாள் மாவட்ட தலைவர் வ.பாலசுப்பிரமணியன் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி, சாசன பொருளாளர் எஸ். மைதீன் பிச்சை துணைத் தலைவர் ஜி ,வி , ராஜ்குமார் முன்னிலை வகித்தார்கள் , இந்த ஆண்டின் செயலாளர்கள் ஜி ,குமரன் , என் ரவி ஆசிரியர் , பொருளாளர் ஆவி, ரவி, முன்னாள் செயலாளர்கள் பீ,பழனிவேல் (எ ) டிவி குமார் , எம். எஸ். ஆறுமுகம், .முன்னாள் பொருளாளர் சபரி பிளக்ஸ் ஏ.குமார் , உறுப்பினர்கள் , ஏஎம்.சரவணன் , டி.குமரன் , சுப .பெரியசாமி , கியூட் கேக் முருகன், ஜி. ராஜசேகர் கலந்து கொண்டனர். மதியம் உணவு பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் , சுமை தூக்கும் தொழிலாளர்கள் , ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு 300 நபர்கள் மேல் வழங்கப்பட்டது.