பேராவூரணி, ஜூலை 16
பேராவூரணி பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளில் குமரப்பா பள்ளி சார்பில் நோட்டு, பேனா வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமையில், குமரப்பா பள்ளியில் பயிலும் மாணவர்களின் பங்களிப்பு, பேராவூரணி பகுதியில் உள்ள கூப்புளிக்காடு, காலகம், கரம்பக்காடு, நெடுவாசல், ஏனாதிக்கரம்பை-வீரராகவபுரம், நாடங்காடு, மேலஒட்டங்காடு ஆகிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் ஆகிய பொருட்களை குமரப்பா பவுண்டேஷன் பொருளாளர் அஸ்வின்கணபதி, குமரப்பா பள்ளி மாணவர்கள் வழங்கினர்.
இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, பள்ளி முதல்வர் சர்மிளா, நிர்வாக அலுவலர் சுரேஷ், ஆசிரியர்கள் விஜய், மூர்த்தி, ரமாதேவி, அரவிந்தன், பிரியங்கா, அஞ்சுகாதேவி, பெரியநாயகி, மாணவர்கள் கலந்து கொண்டனர்.