பேராவூரணி டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திரதின விழாவில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஹெச்.டி.எப்.சி வங்கி பேராவூரணி கிளை மேலாளர் முனிரெத்தினம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, பொருளாளர் அஸ்வின்கணபதி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் சர்மிளா நன்றி கூறினார்.