சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சாந்தி தலைமை வகித்து பேசுகையில், நடப்பு ஆண்டில் செயல்படுத்தகூடிய திட்டங்கள் அதன் மானிய விபரங்கள் பற்றிம், இயற்கை முறையில் சாகுபடி செய்து சத்தான உணவு பொருட்கள் உற்பத்தி செய்து பயன்பெறுமாறு கேட்டுகொண்டார்.
இயற்கைவழி வேளாண்மை பற்றிய விளக்கங்களை விதைசான்றுத்துறை அலுவலர் வெங்கடாசலம் பேசுகையில், இயற்கை வேளாண்மையில் பயணீடுத்தகூடிய மீன் அமிலம், பஞ்சகாவியா, அமிர்த கரைசல் தயாரிக்கும் முறைகள் அதன் பயன்படுத்தும் முறைகள் மற்றும் பயன்கள் பற்றிம், இயற்கைவழி வேளாண் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் சான்று பெறும் முறைகள் பற்றி பேசினார்.
துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியன் பேசுகையில், ராசாயன உரங்களை தவிர்த்து இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் மண்ணின் வளமும் காத்து நஞ்சில்லா உணவுப்பொருட்கள் கிடைக்கிறது என கூறினார்.
பயிற்சியில் இயற்கை வேளாண்மை சமந்தமான இடுப்பொருட்கள் விவசாயிகளின் பார்வைக்கு வேளாண் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் கண்காட்சியினை பார்த்து பயனடைந்தனர்.
இதில் விவசாயிகள் கலந்து கொண்டனர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் வரவேற்றார். உதவி அலுவலர் ராஜரெத்தினம் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழழகன், ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.