தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் சா முரசொலி, செகந்திராபாத் - ராமநாதபுரம் ரயிலினை பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவன செய்து, பேராவூரணி ரயில் நிலையத்தில் ரயிலினை வரவேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக் குமார், ரயில் நிலைய மேலாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர வர்த்தக கழக பொறுப்பாளர்கள், லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள், கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என திரளானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.