தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணம் கிளை சார்பில் 78வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 10ஆம் ஆண்டு இரத்ததானம் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆவணம் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமை வகித்தார்,மாவட்ட துணைத் தலைவர் அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார். மேலும் இம்முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக பட்டுக்கோட்டை அரசு மருத்துவர் சீனிவாசன்,பெரியநாயகி புரம் ஊராட்சி மன்றத் தலைவர் வத்சலா முத்துராமன் மற்றும் திருச்சிற்றம்பலம் தலைமைக் காவலர் த.சு பாராதிதாசன் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தனர். இம்முகாமில் இருபதுக்கு அதிகமான நபர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செயதனர் இம்முகாமில் பெற்ற இரத்தக்கொடையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.