தஞ்சாவூர், ஆக.2 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், திருச்சிற்றம்பலத்தில்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்,
கலைஞரின் கனவு இல்ல திட்டம் - பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டும் பணி ஆணைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணைகளை வழங்கி, அரசின் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், பேராவூரணி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, திமுக ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன், கல்விப்புரவலர் அ.அப்துல் மஜீத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இதில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 26 ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், பயனாளிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், 198 பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கும், 89 பயனாளிகளுக்கு வீடு பழுது நீக்கம் செய்வதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது.
முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) க.செல்வேந்திரன் வரவேற்றார். நிறைவாக, வட்டார வளர்ச்சி அலுவலர் மா.சாமிநாதன் (வ.ஊ) நன்றி கூறினார்.