பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 86 பேருக்கும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 439 பேருக்கும் விலையில்லா
மிதிவண்டிகளை சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் வழங்கிப் பேசினார்.
நிகழ்வில், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல், மருத்துவர் துரை.நீலகண்டன், கல்விப்புரவலர் அ.அப்துல் மஜீத், பள்ளி தலைமையாசிரியர் மாரிமுத்து, சமூக ஆர்வலர்கள் பழனிவேல், நா.வெங்கடேசன், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, உதவித் தலைமை ஆசிரியர் காளீஸ்வரி வரவேற்றார். நிறைவாக உதவித் தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.