தஞ்சாவூர், ஆக.6 -
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில், அறந்தாங்கி அருகே உள்ள முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கும் முதியோர்களுக்கு மருத்துவ சேவை அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள அழியாநிலை சத்திரப்பட்டி - குரும்பூர் பகுதியில் உள்ள புதிய நமது இல்லத்தில்,
ஏராளமான ஆதரவற்ற முதியவர்கள் தங்கி உள்ளனர்.
இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான
கா.அண்ணாதுரை, தலைமைச் செயற்குழு உறுப்பினரும் பேராவூரணி எம்எல்ஏவுமான
நா.அசோக்குமார் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர்
டாக்டர் வி. சௌந்தரராஜன் தலைமையில் மருத்துவக் குழுவினர் சென்று முதியோர்களின் உடல்நலனைப் பரிசோதித்தனர்.
பின்னர் அவர்களுக்கு ரத்த சோகை, தோல் நோய்கள், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்களுக்கான மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
அப்போது நாடங்காடு பாரதி, ஆவணம் திருச்செல்வம், வினோத், முதியோர் இல்ல நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.