பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம், பெருமகளூர் ஸ்ரீராம் மெடிக்கல் மற்றும் தஞ்சாவூர் மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய பெருமகளூர் பேரூராட்சி பணியாளர்களுக்கான கண் பரிசோதனை மருத்துவ முகாம் பெருமகளூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு பெருமகளூர் பேரூராட்சி பெருந்தலைவர் சுந்தரதமிழ் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் பெருமகளூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆதித்யன், பெருமகளூர் ஸ்ரீராம் மெடிக்கல் நிறுவனர் ராமச்சந்திரன், பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்க நிர்வாக அலுவலர் இராமநாதன், சாசன உறுப்பினர்கள் இளங்கோவன் ஆசிரியர், மற்றும் ஜெயகாந்தன் ஆசிரியர், பெருமகளூர் பேரூராட்சி துணைத் தலைவர் சித்ரா, கவுன்சிலர்கள் கல்யாணி, தமிழரசி, ஆர்.சேகர், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் மொத்தம் 147 நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.