தஞ்சாவூர், ஆக.9 - தமிழ் புதல்வன் திட்டம் கோயமுத்தூர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைத்துள்ள பாரதி கலை அரங்கில் காணொலிக்காட்சி மூலம் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதில், கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமை வகித்துப் பேசினார். மேலும் துறைத்தலைவர்கள், ஞானசேகரன், ராஜ்மோகன், பழனிவேல், உதவிப் பேராசிரியர்கள் ப.ஜெயகுமார், ஏ.அருண்மொழி உள்ளிட்டோர் தமிழ் புதல்வன் திட்டத்தின் பயன்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர். இதில், திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.