தஞ்சாவூர், ஆக.5 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 47 மாணவர்கள், 60 மாணவிகள் என மொத்தம் 107 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் ஜலீலா பேகம் முகமது அலி ஜின்னா, பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், தனபால், ஜமாத் தலைவர் அல்லாப்பிச்சை, ஹபீப் முகமது, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரஹ்மத் நிஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார்.