அரசு பள்ளிகளல் நடைபெற இருக்கும் பள்ளி மேலாண்மை குழு மறுக்கட்டமைப்பு சார்ந்த வட்டார அளவிலான பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பேராவூரணி வட்டாட்சியர் திருமதி.இரா.தெய்வானை அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது இதில் சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி வட்டார கல்வி அலுவலர்கள், காவல் ஆய்வாளர்கள் , வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்,ஆசிரியர் பயிறுநர்கள் கலந்துக்கொண்டனர். இதில் பள்ளி மேலாண்மை குழு மறுக்கட்டமைப்பை சிறப்பான முறையில் நடத்துவது குறித்து வழிமுறைகளை வட்டார கல்வி அலுவலர் இராமமூர்த்தி அனைவருக்கும் தகவல்களை தெரிவித்தார். வட்டாட்சியர் பள்ளிகளில் இந்நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்திட தேவையான ஆலோசனைகள் வழங்கினார் இறுதியில் மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன் கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ஆகஸ்ட் 06, 2024
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க