பேராவூரணி கோக்கனட்சிட்டி லயன்ஸ் இன்ஸ்பயர் சங்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்கல்

IT TEAM
0

 


பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், பேராவூரணி அரசு மருத்துவமனை புற நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து பல மாதங்களாக நோயாளிகளுக்கு உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டு வரும் லயன்ஸ் சங்கம் சார்பில், இந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுக்கு, சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ் தலைமை வகித்தார். சாசன தலைவரும் மாவட்ட இணை பொருளாளருமான எம்.நீலகண்டன், வட்டாரத் தலைவர் எஸ்.பாண்டியராஜன், முன்னாள் தலைவர் வ.பாலசுப்ரமணியன் மற்றும் சாசன பொருளாளர் மைதீன் பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், 

மாவட்ட காந்தி ஜெயந்தி தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்ததி, முன்னாள் செயலாளர் கோவிந்தன், எம்எஸ்ஆறுமுகம்,முன்னாள் பொருளாளர் சிவானந்தம், சங்கத்தின் மூத்த உறுப்பினர் ராஜசேகர், சங்க தகவல் தொடர்பு அலுவலர் கியூட் கேக் முருகன் மற்றும் மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.  இந்தக் காலை உணவு அன்னதானத் திட்டத்திற்கு முழுச் செலவையும் செந்தூரன் ஸ்ரீநிதி திருமணநாளை முன்னிட்டு, எம். நீலகண்டன் ஏற்றுக் கொண்டார். சங்க செயலாளர் க.குமரன் மற்றும் சங்க பொருளாளர் ரவி ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top