மணக்காடு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கோ.குமார் தலைமை வகித்தார். பெருமகளூர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.கணேசன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சிகளில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில், மணக்காடு அருணாச்சலம் மண்கொண்டார், திமுக ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.விஜயகுமார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகுமீனா தங்கப்பன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திருச்செல்வி, பெருமகளூர் பேரூராட்சி தலைவர் சுந்தரத்தமிழ் ஜெயப்பிரகாஷ், நகரச் செயலாளர் மாரிமுத்து, பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜெயசுதா, பேரூராட்சி கவுன்சிலர் சண்முகம் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன், சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மணக்காடு பள்ளியில் 37 பேருக்கும், பெருமகளூர் பள்ளியில் 40 பேருக்கும் என மொத்தம் 77 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.