தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற மதிப்பீட்டுக் குழுவிற்கு உறுப்பினராக KAIFA நியமனம்

IT TEAM
0

 


 பேராவூரணி கைஃபா விவசாயிகள் சங்கம்  தமிழ்நாடு மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐஃபா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கைஃபா வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில், " தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற மதிப்பீட்டுக் குழுவிற்கு  உறுப்பினராக  KAIFA நியமனம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இந்த அமைப்பில் உறுப்பினராக பணியாற்ற இருக்கிற கைஃபா, தமிழ்நாடு முழுவதும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் பணிகளை ஊக்குவிப்பது, ஆதரிப்பது மற்றும் விளக்குவது ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபடும்.  பல்வேறு சுற்றுச்சூழல் முயற்சிகளின் தாக்கத்தை மதிப்பிடுவது மற்றும் துறைக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குவது ஆகியவற்றை செவ்வனே செய்யும். இந்த மதிப்புமிக்க வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்களுக்கு  கைஃபா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.  இந்த நேரத்தில், ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக, மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலின் தேவைகளுக்கு சேவை செய்ய அயராது உழைப்பதாக கைஃபா உறுதியிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top