பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன் சங்கம் சார்பில் அன்னை தெரசா அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அன்னை தெரசா அவர்களின் சேவையினை பாராட்டி, அவர் பிறந்த தினத்தில் தினம் ஒரு சேவை திட்டம், பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத்தினரால் தொடங்கப்பட்டுள்ளது. அதையடுத்து, காலை 50 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் க.குமரன், செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அன்னதான நிகழ்வினை சபரி ப்ளெக்ஸ் உரிமையாளர் குமார் துவக்கி வைத்தார். நிகழ்வில் லயன்ஸ் உறுப்பினர்கள் லட்சுமி மெடிக்கல் உரிமையாளர் பாலமுருகன், ராஜசேகர், பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.