பேராவூரணி தாலுக்கா, முடச்சிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்று, மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழாவில் கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத்தினர் பங்கேற்றனர். சங்கத்தின் தலைவர் நா.ப. ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் இளங்கோ, சங்கத்தின் முன்னாள் தலைவர் வ.பாலசுப்பிரமணியன், முதல் நிலைத் தலைவர் ராஜ்குமார், முன்னாள் பொருளாளர் சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் செயலாளர் க. குமரன் விழாவை ஒருங்கிணைத்திருந்தார். பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.