பேராவூரணி, ஆக 6
பேராவூரணி அருகே காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், லயன்ஸ் கிளப் சார்பில் தாய்ப்பால் வார விழா நடந்தது. கிளப் தலைவர் துரையரசன் தலைமை வகித்தார். டாக்டர் அறிவானந்தம் தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து, கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு விளக்கம் அளித்து பேசினார். 25 தாய்மார்களுக்கு சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பிரட், பழங்கள், பேரீச்சம்பழம் அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் கிளப் வட்டாரத் தலைவர் சிவநாதன், நிர்வாகிகள் எஸ்.கே.ராமமூர்த்தி, இ.வி.காந்தி, கே.கே .டி.சுப்பிரமணியன், ராஜா, ரவிச்சந்திரன், செயலர் ராஜேந்திரன், பொருளர் இளையராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், செவிலியர்கள், தாய்மார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.