சவுரியம் ஆண்டின் கவர்னரின் பசிப்பிணி போக்குதல் திட்டத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பாக வட்டாரத் தலைவர்
எஸ்.பாண்டியராஜன், முதல் துணைத் தலைவர்
ஜி.வி.ராஜ்குமார், முன்னாள் பொருளாளர்
ஜி.சங்கர் ஜவான், மற்றும் ஜி.சசிகுமார் ஆகியோர் இணைந்து, ஆறாவது வாரமாக பேராவூரணிஅரசு மருத்துவமனையில் 200 புற நோயாளிகளுக்கு சத்தான காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு, சங்கத் தலைவர் பி. ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட இணை பொருளாளர்
எம்.நீலகண்டன், மாவட்டத் தலைவர் கே.இளங்கோ, சங்கப் பொருளாளர் ஏ.ரவி,முன்னாள் தலைவர் வ.பாலசுப்ரமணியன், சாசன பொருளாளர் எஸ்.மைதீன் பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், முன்னாள் செயலாளர்கள் டிவி குமார்(எ) பழனிவேல், ஆறுமுகம்,
முன்னாள் பொருளாளர் பன்னீர்செல்வம், கதிரவன் ராஜசேகர்,பெருமாள், பிரதீஷ்,முருகன்,
ரவிச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.