தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நகரில், டாக்டர் காந்தி மருத்துவமனை அருகே, ஆனந்தவல்லி வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழமையான பாலம் சேதமடைந்தது. இதையடுத்து, பேராவூரணி பேரூராட்சி சார்பில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, புதிய பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில், பேராவூரணி பேரூராட்சித் தலைவர் சாந்தி சேகர், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், பேரூராட்சி உறுப்பினர் அஞ்சம்மாள் ராஜேந்திரன், அச்சகம் கோ.நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்கால் குறுக்கே ரூ.20 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி துவக்கம்
ஆகஸ்ட் 09, 2024
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க