பேராவூரணி, ஆக 28
பேராவூரணியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த இரு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
ரகசியத் தகவலின் அடிப்படையில், பேராவூரணியில், பட்டுக்கோட்டை சாலையில் உள்ள இரு கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன், மேற்பார்வையாளர்கள் அடைக்கலம், சுரேஷ், ஜான்சன் ஆகியோர் சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கடைகளை 15 நாட்கள் தற்காலிகமாகப் பூட்டி சீல் வைத்தனர். மேலும், இரு கடைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு துறையினர் கூறியதாவது, தடை செய்யப்பட்ட புகைலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதே போல் இரண்டாவது முறையாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றனர்.