பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லைன்ஸ் சங்கம் சார்பில், பேராவூரணியில் உள்ள அன்பில் நாம் முதியோர் இல்லத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் க. குமரன், பொருளாளர் ச.ரவி, சாசனத்தலைவர் நீலகண்டன், மாவட்ட தலைவர் இளங்கோ, வட்டாரத் தலைவர் எஸ்.பாண்டியராஜன், சாசன பொருளாளர் மைதீன் மற்றும் முன்னாள் காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், அன்பில் நாம் அறக்கட்டளையின் நிறுவனர் பாக்கியலட்மியிடம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. நிகழ்வில், முன்னாள் செயலாளர்கள் டி.வி.குமார், எம்.எஸ்.ஆறுமுகம், பன்னீர்செல்வம் மற்றும் சங்க உறுப்பினர் பிரதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.