பேராவூரணி, ஆக 20 டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் (ஜே.ஆர்.சி) ஜெனிவா ஒப்பந்தநாள் விழா நடந்தது. எம்.எல்.ஏ அசோக்குமார் தலைமை வகித்து, ஜே.ஆர்.சி கொடி ஏற்றினார். ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் பேராவூரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட 40க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டு, டான்ஸ் ஆகிய போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜே.ஆர்.சி மாவட்ட அமைப்பாளர் பிச்சைமணி கலந்து கொண்டு ஜெனிவா ஒப்பந்தநாள் பற்றி மாணவர்களிடம் விளக்கி பேசினார். இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சேகர் நன்றி கூறினார்.