பேராவூரணி மற்றும் சேதுபாவசத்திரம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளில் பயிலும் 6 முதல் 10 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அறிவியல் நாடகப் போட்டி பேராவூரணி குமரப்பா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பங்கு பெற்று தங்களது அறிவியல் சார்ந்த நாடகத் திறன்களை வெளிப்படுத்தினர் நிகழ்வினை ஆவணம் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கருணாநிதி அவர்கள் தலைமையேற்று நடத்தினார் , வட்டார வளமையும் மேற்பார்வையாளர் கோகுல கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பயிறுநர்கள் முருகேசன், சாஜிதா பானு ஆகியோர் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொண்டனர் , போட்டிக்கான நடுவர்களாக தலைமை ஆசிரியர் நாடிமுத்து , பட்டதாரி ஆசிரியர் நடராஜன் ஆகியோர் பணியாற்றினர் . போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், குமரப்பா பள்ளியின் தலைமை ஆசிரியர் சிறப்பாக செய்திருந்தார்.
பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் நாடக போட்டி
ஆகஸ்ட் 21, 2024
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க