பேராவூரணி பேரூராட்சி பணியாளர்களுக்கான சிறப்பு கண் மருத்துவ முகாம்

IT TEAM
0


 பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லைன்ஸ் சங்கமும், தஞ்சாவூர் மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய, பேராவூரணி பேரூராட்சி பணியாளர்களுக்கான சிறப்பு கண் மருத்துவ முகாம் பேராவூரணி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் க.குமரன் வரவேற்புரையாற்றினார். நிகழ்வுக்கு, மண்டல இணைப் பொருளாளர் மற்றும் சாசன தலைவர் எம் நீலகண்டன், வட்டாரத் தலைவர் எஸ் பாண்டியராஜன், முன்னாள் செயலாளர்கள் டிவி.குமார் மற்றும் எம்எஸ்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ முகாமினை, பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா தொடங்கி வைத்தார். நிகழ்வில் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், முன்னாள் செயலாளர் ஜீவி.நடராஜன், முன்னாள் பொருளாளர்கள் சங்கர் ஜவான் மற்றும் சபரி குமார், எல்ஐசி ராமசாமி, கதிரவன், சங்கத் தகவல் தொடர்பாளர் க்யூட் கேக் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில், 150 க்கும் மேற்பட்ட பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர். சங்க பொருளாளர் ஆவி.ரவி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top