பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை, செங்கமங்கலம் ஊராட்சி மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் செங்கமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு செங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஈகை செல்வம் தலைமை தாங்கினார். பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் ஆதித்யன், பொருளாளர் சாமியப்பன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த முகாமில் மொத்தம் 205 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்டவர்களின் 8 நபர்களுக்கு கண்புரை நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.10 நபர்களுக்கு இவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.