பேராவூரணி தாலுக்கா,வீரியங்கோட்டை ராஜராஜன் கல்வி நிறுவனத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் தலைமை வகித்தார். கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க தலைவர் நா.ப.ரமேஷ், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில், முன்னால் இந்திய ராணுவ வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில், சங்க செயலாளர் ஜி.குமரன், பொருளாளர் ஆ.வி.ரவி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஷேக் தாவுது, பிடிஏ முன்னாள் தலைவர் கலிஃபுல்லா, ஆசிரியர் வீரக்குமார் பள்ளி வளர்ச்சி குழு அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் வி.பாலசுப்பிரமணியன், முன்னாள் செயலாளர் எம்எஸ்.ஆறுமுகம், முதல் நிலை துணைத் தலைவர் ஜி.வி.ராஜ்குமார், முன்னாள் பொருளாளர் பி.பன்னீர்செல்வம், சங்க உறுப்பினர்கள் டி.மணிகண்டன், சுப.பெரியசாமி, க்யூட் கே.முருகன் மற்றும் அ.சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.