தஞ்சாவூர், செப்.14 - தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னை உத்தரவின் படியும் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் பேராவூரணி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் ஆகியோரின் அறிவுறுத்தலின் படியும் சனிக்கிழமையன்று, பேராவூரணி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இந்த தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வில், வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான என்.அழகேசன், வழக்கறிஞர்
ஏ.ஆர்.நடராஜன் ஆகியோர் அடங்கிய அமர்வில்,
நிலுவையில் உள்ள 135 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 65 வழக்குகள் சமரச முறையில் முடிவுற்று, அதற்கு தீர்வு தொகையாக ரூ.8,62,,600/- (ரூபாய் எட்டு லட்சத்து அறுபத்து இரண்டாயிரத்து அறுநூறு மட்டும்) வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில பேராவூரணி வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள், காவல் துறையினர், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்காடிகள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பேராவூரணி வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக அலுவலர் (பொறுப்பு) பி.சந்தோஷ் குமார் செய்திருந்தார்.