பேராவூரணி அருகே ஆதனூரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

IT TEAM
0

 


பேராவூரணி பேரூராட்சி 17 ஆவது வார்டு ஆதனூர் - கருப்பமனை  தேரடித் திடலில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. 


நிகழ்ச்சிகளுக்கு, பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தும், தென்னங்கன்றுகள் நட்டு வைத்தும் பேசினார். 


இதில், வட்டாட்சியர் தெய்வானை, வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், பேரூராட்சி செயல் அலுவலர் இரா.ராஜா, கூட்டுறவு சார்பதிவாளர் தாரணி, 

திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் குழ.செ.அருள்நம்பி,  திமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர் பேரூராட்சி துணைத்தலைவர் கி.ரெ.பழனிவேல், பேரூராட்சி உறுப்பினர் பீ.காரல்மார்க்ஸ் உள்ளிட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராமத்தினர், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


இது குறித்து, கவுன்சிலர் பீ.காரல்மார்க்ஸ் கூறுகையில் "இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது எம் பகுதி மக்களின் 30 ஆண்டுகால கனவு. இன்று நினைவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது" என்றார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top