பேராவூரணி, செப் 3
பேராவூரணி நகர வர்த்தகர் அலுவலகத்தில் தஞ்சை வருமான வரித்துறை சார்பில் வருமான வரி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுக்கு நகர வர்த்தகர் கழக தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தஞ்சை வருமான வரி உதவி ஆணையர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு பேசுகையில், முன்கூட்டியே செலுத்தும் வரி, ரொக்க பண பரிவர்த்தனையின் அபாயங்கள், அனைத்து உகந்த செலவினம் செய்யும்பொழுதும், உரிய விகிதத்தில் வருமான வரிப் பிடித்தம் செய்ய வேண்டிய அவசியம், வரிப் பிடித்தம் செய்த தொகையினை மத்திய அரசின் கணக்கில் காலத்தே செலுத்த வேண்டிய கட்டாயம், டி.டீ.எஸ் காலாண்டு படிவம் தாக்கல் செய்ய வேண்டிய முக்கியத்துவம், இணையத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் முறை, கால தாமதமாகவோ, தவறாகவோ அல்லது சரியான தொகையை விட குறைவாகவோ தாக்கல் செய்தால் அதனை சரி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து, வரி செலுத்துவதின் முக்கியத்துவம், ஆண்டுதோறும் தகவல் அறிக்கை எவ்வாறு செலுத்த வேண்டும் என்று பேசினார்.
இதில் வருமான வரி அலுவலர் சாய்குமார், ஆடிட்டர்கள் ஹரிசங்கர், பாலசுப்பிரமணியன், சேக்முகமது, ஆய்வாளர்கள் சீனிவாசன், லக்ஷ்மணன், கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள், கடை உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். செயலாளர் திருப்பதி நன்றி கூறினார்.