பட்டுக்கோட்டை, செப்.14 -
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம் கொண்டிகுளம் ஊராட்சி, துவரமடையில் திமுக பவழ விழா - முப்பெரும் விழாவை முன்னிட்டு, திமுக இளைஞரணி சார்பில், பழங்குடியின நரிக்குறவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சனிக்கிழமை மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளருமான கா.அண்ணாதுரை தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினருமான நா.அசோக்குமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், ஒன்றியச் செயலாளர்கள் ப.ராமநாதன், மு.கி.முத்துமாணிக்கம், க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீர.சரவணன், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆதி.ராஜேஷ், துணை அமைப்பாளர் டாக்டர் ஆர்.சந்திரசேகரன், இளைஞர் அணி நிர்வாகிகள் வீரமணி, அரவிந்த், ஆரோ.அருள், முகிலன், பட்டுக்கோட்டை ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட மகளிர் அணி தலைவர் தீபலட்சுமி, அதிராம்பட்டினம் மேற்கு நகரப் பொறுப்பாளர் அஸ்லம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்கள் 500 பேருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.