பேராவூரணியில், கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் சார்பில், பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பேராவூரணி கட்டுமானப் பொறியாளர் சங்க தலைவர் எம்.திருப்பதி தலைமை வகித்தார். செயலாளர் எம்.சந்திர மோகன் வரவேற்றார். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் பொறியாளர் தினக்கொடியேற்றி வைத்து, ஓய்வு பெற்ற அரசுப் பொறியாளர்களை கௌரவித்து வாழ்த்திப் பேசினார். மண்டலத் தலைவர் சி.துரையரசன், மண்டலச் செயலாளர் என்.சரவணன் ஆகியோர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். நிறைவாக சங்க பொருளாளர் ஏ.சக்தி கணேசன் நன்றி கூறினார். முன்னதாக பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொறியாளர் சங்க நிர்வாகிகள் ஏசிசி.ராஜா, டி.ஜெயக்குமார், பி.கோவிதரன், கே.குட்டியப்பன், எஸ்.ஜெயச்சந்திரன், எஸ்.கலைச் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.