தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், வட்டார வேளாண்மை அலுவலகம் அருகே, வேளாண்மை பொறியியல் துறை சார்பில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இயந்திரக்கூடத்திற்கான கட்டடம் அமைக்கும் பணி, அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி கட்டடப்பணியை துவக்கி வைத்தார். அட்மா தலைவர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், வேளாண்மை உதவி செயற்பொறியாளர் ஆ.செங்கோல், வேளாண் உதவி இயக்குநர் (பொ) எஸ்.ராணி, உதவிப் பொறியாளர் பிரேமா, வேளாண்மை உதவி அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி வட்டாரத்தில், வேளாண் பணிகளுக்காக விவசாயிகளுக்கு வாடகைக்கு விடுவதற்காக 3 டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றை நிறுத்தி வைப்பதற்கும், இயந்திரங்களை பாதுகாக்க பயன்படும் வகையிலும் இந்த கட்டடம் அமைக்கப்படுகிறது.