பேராவூரணி, செப் 23,
பேராவூரணி ஸ்ரீவிநாயகா திருமண மஹாலில், லயன்ஸ் கிளப், ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து நடத்தும், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
கிளப் தலைவர் துரையரசன் தலைமை வகித்தார். சாசன பொருளர் கந்தப்பன் முன்னிலை வகித்தார். செயலர் ராஜேந்திரன் வரவேற்றார். எம்.எல்.ஏ அசோக்குமார், ஸ்ரீவிநாயகா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் சந்திரமோகன் ஆகியோர் முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர், அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் குழு கண் நோயாளிகளை பரிசோதனை செய்ததில் 720 பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், 240 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் மண்டலத் தலைவர் சௌரி, வட்டாரத் தலைவர் சிவநாதன், உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் இளையராஜா நன்றி கூறினார்.