பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், பேராவூரணி காமராஜர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. 250 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து 63 வது வாரமாக வழங்கப்படும் இந்த சேவை நிகழ்வுக்கு, சங்கத் தலைவர் நா.ப. ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட இணை பொருளாளரும் சங்கத்தின் சாசன தலைவருமான எம்.நீலகண்டன், செயலாளர் க. குமரன், வட்டாரத் தலைவர் பாண்டியராஜன், சாசன பொருளாளர் மைதீன், முதல் நிலைத் தலைவர் ராஜ்குமார், முன்னாள் காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன், முன்னாள் செயலாளர் எம்எஸ்.ஆறுமுகம், முன்னாள் பொருளாளர்கள் சபரி குமார் மற்றும் சங்கர் ஜவான், சங்கத்தின் மூத்த உறுப்பினர் ராஜசேகர், புதிய உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றைய நிகழ்வுக்கான செலவினை சங்க உறுப்பினர் மற்றும் முன்னாள் காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன், வட்டாரத் தலைவர் பாண்டியராஜன், சாசன பொருளாளர் மைதீன், முன்னாள் பொருளாளர் சபரி குமார், சங்கத்தின் புதிய உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். நிகழ்வில், அரசு மருத்துவமனையில் உட்புற மற்றும் வெளிப்புற நோயாளிகள் சுமார் 250 பேர் பயனடைந்தனர்.