சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட குறவன்கொள்ளை, கஞ்சாங்காடு, கல்லாங்காடு மற்றும் நாடாகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 33 எண்ணிக்கையிலான மேசை மற்றும் இருக்கைகளை, மாவட்ட கவுன்சிலர் சுவாதி காமராஜ், 2024 ஆண்டின் 15-ஆவது மத்திய நிதித்திட்டத்திலிருந்து வழங்கினார். அவற்றை, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் குருவிக்கரம்பை ஊராட்சி மன்ற தலைவர் சோ.வைரவன் ஆகியோர் பெற்றுக்கொண்டு, மாவட்ட கவுன்சிலர் சுவாதி காமராஜ் க்கு நன்றி தெரிவித்தனர்.