பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மாவட்ட தலைவர் ஏஎஸ்ஏ. தெட்சிணாமூர்த்தி அவர்களின் சீரிய ஏற்பாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பேராவூரணி தனம் மஹாலில் மாவட்ட காந்தி ஜெயந்தி விழா நடைபெற இருக்கிறது. இது குறித்து, காந்தி ஜெயந்தி விழா மாவட்ட தலைவர் ஏஎஸ்ஏ.தெட்சிணாமூர்த்தி கூறுகையில், "வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிற மாவட்ட காந்தி ஜெயந்தி விழாவில், மாவட்ட அவை இணை பொருளாளர் எம்.நீலகண்டன் முன்னிலை வகிக்க, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜிஆர்.ஸ்ரீதர், மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் இரா.சி.உதயகுமார், இந்திரா காந்தி யூத் ஃபவுண்டேஷன் நிறுவனர் கே.மகேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக சின்னத்திரை பட்டிமன்ற பேச்சாளர் கல்பனா தர்மேந்திரா கலந்துகொள்ள இருக்கிறார். மேலும், லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர், உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர், மாவட்ட முதல் துணை ஆளுநர், மற்றும் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும், மாவட்ட பொறுப்பாளர்கள் மண்டல தலைவர்கள் வட்டார தலைவர்கள் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பினை சாசன செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் சாசன பொருளாளர் மைதீன் பிச்சை ஆகியோர் செய்து வருகின்றனர். விருந்தோம்பல் ஏற்பாடினை சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ், செயலாளர் க. குமரன் மற்றும் பொருளாளர் ஆவி.ரவி ஆகியோர் செய்து வருகின்றனர். அனைவரும் கலந்து கொண்டு காந்தியடிகள் புகழ் பரப்ப துணை நிற்போம்" என்றார்