காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கமும் ஈஷா யோகா மையத்தின் ஒரு அங்கமான காவேரி கூக்குரல் குரல் இயக்கம் இணைந்து தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க மரம் நடும் விழா. இந்த விழாவில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் சேவகர் பாரதி கலந்து கொண்டார். பேராவூரணி கோகனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் நா.ப.ரமேஷ் அவர்கள் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் எம்.நீலகண்டன், சாசன செயலாளர் மைதீன், வட்டாரத் தலைவர் பாண்டியராஜன், தென்னை வளர்ச்சி குழு மாவட்ட தலைவர் பொறியாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், முதல் நிலைத் தலைவர் ராஜ்குமார், சங்கத்தின முன்னாள் பொருளாளர்கள் பன்னீர்செல்வம், சபரி குமார், சங்கர் ஜவான் முன்னாள் காவல்துறை ஆய்வாளர் அரிமா ரவிச்சந்திரன், சங்கத்தின் தகவல் தொடர்பாளர் முருகன் மற்றும் சங்கத்தின் உறுப்பினர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஈஷா யோக மையத்தின் ஓர் அங்கமான காவேரி கூக்குரல் இயக்கம், தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க மரங்கள் நடும் பணியை மேற்கொண்டு வருகிறது. காந்தி ஜெயந்தியை சிறப்பிக்கும் வகையில் அக்டோபர் 2ம் தேதி அன்று, விவசாயிகளின் பங்களிப்போடு தமிழகம் முழுவதும் உள்ள 86 விவசாய நிலங்களில், 653 ஏக்கர் நிலப்பரப்பில், 1,82,547 மரக்கன்றுகள் நடப்பட்டது. இறுதியாக சங்கத்தின் செயலாளர் குமரன் நன்றி கூறினார்.