பேராவூரணியில், திமுக இளைஞரணி சார்பில் இரு நாட்கள் கிரிக்கெட் போட்டி எம்எல்ஏ நா.அசோக்குமார் துவக்கி வைத்தார்

IT TEAM
1 minute read
0

 


தஞ்சாவூர், அக்.5 - 

கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பவள விழாவை முன்னிட்டு, திமுக பேராவூரணி தெற்கு ஒன்றிய, நகர இளைஞரணி சார்பில், முதலாம் ஆண்டு சுழல் கோப்பைக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி, பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை காலை தொடங்கியது. 


நிகழ்ச்சிக்கு திமுக தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார். பேரூர் கழகச் செயலாளர் என்.எஸ்.சேகர் வரவேற்றார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் 

என்.அசோக்குமார் கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார். 


இதில், திமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், 

பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் 

கோ.இளங்கோவன்,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆதி.ராஜேஷ், துணை அமைப்பாளர்கள் டாக்டர் ஆர்.சந்திரசேகரன், இரா.அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரம், நான்காம் பரிசு ரூ.20 ஆயிரம், ஐந்தாம் பரிசு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் சுழல் கோப்பை வழங்கப்படுகிறது. 


இந்த விளையாட்டுப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெறும். அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும்.



ஏற்பாடுகளை பேராவூரணி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செருவாவிடுதி ஆர்.கே.பி. குமார், நகர இளைஞரணி ஆ.பிரவின் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top