தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், செருவாவிடுதி வடக்கு ஊராட்சி, ஈச்சன்விடுதி கள்ளர் தெரு குடியிருப்புக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய தார்ச்சாலை அமைக்க ரூ.14.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமையன்று புதிய சாலை அமைக்கும் பணியை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.
இதில், திமுக பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஒன்றியக்குழு உறுப்பினர் மாலா போத்தியப்பன், ஊராட்சி மன்றத் தலைவர் ரா.த.விஜயராமன், இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.கே.பி குமார், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய அவைத் தலைவர் பன்னீர்செல்வம், ராஜாங்கம், மணிவண்ணன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.