புதுக்கோட்டை, இழுப்பூர் மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை அலுவலகம் பேராவூரணி என்எஸ்என் டவரில் திறந்து வைக்கப்பட்டது. மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் இரா.சி.உதயகுமார் அலுவலகத்தை திறந்து வைத்து, "பேராவூரணி, பட்டுக்கோட்டை, முத்துபேட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி. பகுதிகளின் மாணவ மாணவிகள், பேராவூரணி அட்மிசன் அலுவலகத்தை பயன்படுத்தி, அட்மிஷன் செய்து கல்லூரி படிப்பை தொடர வாய்பை ஏற்படுத்தி அதன் மூலம் கல்வி பயில முடியும். பேராவூரணி பகுதி பிஆர்ஓ ஆக நியமிக்கப்பட்டிருக்கிற ஏஎஸ்ஏ.தெட்சிணாமூர்த்தி அவர்களின் சேவையை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என்றார். நிகழ்வில், ஐய்யப்பா சேவா சாமசத்தின் மாநில பொது செயலாளர் கேஆர்வி. நீலகண்டன், சின்னத்திரை பட்டிமன்ற பேச்சாளர் கல்பானா தர்மேந்ரா, வர்தக சங்க பொருளாளர் சாதிக்அலி, நகை.குமரன், உடல்கல்வி ஆசிரியர் இலுப்பூர் மகேந்திரன், மற்றும் கல்லூரி இயக்குனர் பூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டனர்.