தஞ்சாவூர், அக்.17 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேதுபாவாசத்திரம் ஒன்றியம், திருவத்தேவன் ஊராட்சி, சோமநாதன்பட்டினம் முடியனாறு காட்டாற்றின் குறுக்கே, நீர்வளத்துறை சார்பில் ரூபாய் 9.62 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் திருவள்ளுவன், உதவிப் பொறியாளர் பிரசன்னா ஆகியோர் வரைபடம் மூலம் விளக்கிக் காட்டினார். அப்போது, சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஒன்றியக் கவுன்சிலர்கள் சாகுல்ஹமீது, பாமா செந்தில்நாதன், மீனவர் அணி துணை அமைப்பாளர் கண்ணன், கிளைச் செயலாளர்கள் திருமயன், ராஜா, மகாலிங்கம், வேலாயுதம், அண்ணாதுரை கிராமத் தலைவர் சுப்பிரமணியன், நாட்டுப்படகு மீனவர் சங்கம் ஜெயபால் மற்றும் கிராமப் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். பள்ளியில் ஆய்வு அதனைத் தொடர்ந்து குப்பத்தேவன் அரசு உயர்நிலைப்பள்ளியில், நபார்டு வங்கி உதவியுடன் ரூ.85.44 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டடப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதனையும் சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் ஆய்வு செய்தார். அப்போது, திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், தலைமை ஆசிரியர் எஸ்.மூர்த்தி, ஆசிரியர் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, ஊராட்சி மன்றத் தலைவர் பாலு மற்றும் கிராமத்தினர் உடனிருந்தனர்.