பேராவூரணி, அக் 13
பேராவூரணி அருகே ஏனாதிக்கரம்பை கிராமத்தில் உள்ள ஸ்ரீமாயம்பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத கடைசி வார சனிக்கிழமை முன்னிட்டு வீரராகவபுரம் கிராமத்தார்கள் நேர்த்திக்கடனுக்காக மதலை எடுப்பு விழா நடந்தது.
புரட்டாசி மாத கடைசி வார சனிக்கிழமை அன்று வீரராகவபுரம், ஏனாதிக்கரம்பை, பஞ்சநதிபுரம் ஆகிய கிராம மக்கள் நேர்த்திக்கடனுக்காக பேராவூரணி அருகே சானக்கரை கிராமத்தில்; இருந்து மண்ணில் செய்யப்பட்ட மதலை எடுத்து கொண்டு ஸ்ரீமாயம்பெருமாள் கோயிலை வந்தடைந்து. தொடர்ந்து பெண்கள் பொங்கல், மாவிளக்கு, தீபம் ஏற்றப்பட்டு, அபிஷேக ஆராதனைகளுகம் நடைபெற்றது. மேலும் வருடந்தோறும் வீரராகவபுரம் கிராமத்தார்களாள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் அம்மையாண்டி, வீரராகவபுரம், ஏனாதிக்கரம்பை, பஞ்சநதிபுரம், ஆவணம், கைகாட்டி, பைங்கால், திருச்சிற்றம்பலம் ஆகிய கிராமத்தில் இருந்து பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் ராஜசேகரன், ஏனாதிக்கரம்பை, வீரராகவபுரம், அம்மையாண்டி, பஞ்சநதிபுரம் கிராமத்தார்கள், மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.