தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆடுதுறை 54 இரக விதைநெல் 50 சத மானியத்தில் விநியோகம்

IT TEAM
0


பேராவூரணி, அக் 10

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆடுதுறை 54 இரக விதைநெல் 50 சத மானியத்தில் விநியோகம் என விவசாயிகளுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்படுவதாவது.


சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில்; கரிசவயல், குருவிக்கரம்பை, பெருமகளூர் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் மத்திய கால நெல் இரகமான ஆடுதுறை 54 சான்று பெற்ற விதையும் மற்றும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் சிங்க் சல்பேட் மற்றும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா போன்ற இடுபொருள்கள் 50 சதவீத மானியத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.


மேலும் உயிர் பூஞ்சாண கொல்லி சூடோமோனாஸ் கிலோ 90 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.  இதனை தொடர்ந்து நெல் நுண்ணூட்டமும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகளும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.


மேலும் ஆடுதுறை 54 நெல் இரகமானது பி.பி.டி 5204 மற்றும் ஆடுதுறை-39 (கல்சர்)  விதைகளுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் இனி மேல் மத்திய கால இரகத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே இந்த பட்டத்திற்கு பயன்படுத்த கூடிய சிறந்த இரகமாக ஆடுதுறை 54 விதை நெல் இருக்கிறது. இந்த இரகத்தின் சிறப்பியல்கள் 135 நாட்கள் வயதுடையது. சம்பா பருவத்திற்கு ஏற்றது. சன்ன இரக அரிசி, இலை சுருட்டு புழு, தண்டு துளைப்பான், இலைப்புள்ளி நோய் போன்றவற்றிற்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. சமச்சீர் உரமிடும் பொழுது சாயாத்தண்மை கொண்டது. ஏக்கருக்கு 2200 கிலோ மகசூல் பெற முடியும் என தெரிவித்துள்ளார்.

[09/10, 6:01 pm] Dr Karamchand Gandhi: குருகுலம் உயர்நிலைப் பள்ளி மாணவர் தர்ஷன் குமார் சதுரங்கப் போட்டியில் மாநில அளவில் வெற்றி 


அறந்தாங்கி அருகில் உள்ள குருகுலம் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் சி தர்ஷன் குமார், புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு பள்ளி தாளாளர் சிவனேசன், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top