பிபின் ராபர்ட் உலக சாதனையாளர் அமைப்பு, குருவிக்கரம்பை ஊராட்சி மன்ற தலைவர் சோ.வைரவன் அவர்களின் மக்கள் பணியை அங்கீகரித்து சாதனையாளர் விருது வழங்கிய கௌரவித்திருக்கிறது. புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களால் வாழ்த்தப்பெற்றார். விருது பெற்ற குருவிக்கரம்பை ஊராட்சி மன்ற தலைவர் சோ.வைரவனை உறவினர்களும், கிராம மக்களும் நண்பர்களும் வாழ்த்தி வருகின்றனர்.