பேராவூரணியில் கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் மற்றும் நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய மாவட்ட காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவுக்கு காந்தி ஜெயந்தி விழா மாவட்ட தலைவர் ஏஎஸ்ஏ.தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க மாவட்ட அவை இணைப்பொருளாளர் எம் நீலகண்டன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆளுநர் சபரி ராஜ், உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் எம் இமயவர்மன் மற்றும் மாவட்ட முதல் துணை ஆளுநர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் இரா.சி.உதயகுமார் கலந்து கொண்டார். சிறப்பு பேச்சாளராக சின்னத்திரை பட்டிமன்ற பேச்சாளர் கல்பனா தர்மேந்திரா கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவில், மாணவ மாணவியர்கள் மகாத்மா காந்திஜி, நேதாஜி குறித்து பேச்சு பேசினார். குறிப்பாக, பேராவூரணி முன்னாள் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி மருதையார் குறித்து மாணவிகள் பேசியது உணர்ச்சிகரமாக இருந்தது. விழாவில் லியோ மாவட்ட தலைவர் ஜாய் செந்தில், பார்வைக்கோர் பயண மாவட்ட தலைவர் டி பி கே ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் கே இளங்கோ, மாவட்டத் தலைவர் வ.பாலசுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் எஸ் கே ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் எம் கனகராஜ், வட்டாரத் தலைவர் எஸ்.பாண்டியராஜன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், மண்டல தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், சங்கத் தலைவர்கள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். சாசன செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் சாசன பொருளாளர் மைதீன் பிச்சை ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லைன்ஸ் சங்க தலைவர் நா.ப.ரமேஷ் செயலாளர் க.குமரன் மற்றும் பொருளாளர் ஆவி.ரவி ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். காந்தி ஜெயந்தி விழா மாவட்ட தலைவர் ஏஎஸ்ஏ.தெட்சிணாமூர்த்தி விழாவினை மிகச் சிறப்பாக அமைத்திருந்தார். இவர் முன்னாள் சுதந்திர போராட்ட வீரர் பேராவூரணி நேதாஜி மருதையார் அவர்களின் மகள் வழி பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.