பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாரதி கலையரங்கத்தில், அரசுக் கல்லூரி - பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம் இணைந்து திங்கள்கிழமை ரத்த தான முகாமை நடத்தினர்.
கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமை வகித்து முகாமைத் துவக்கி வைத்தார். இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் - செஞ்சுருள் சங்கம் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நா.பழனிவேல் வரவேற்றார்.
ஸ்டார் லயன்ஸ் சங்கத் தலைவர் சி.பன்னீர்செல்வம், செயலாளர் ஆர்.ஆதித்யன், பொருளாளர் தி.சாமியப்பன், நிர்வாக அலுவலர் சி.ராமநாதன், நிர்வாகிகள் செல்வகுமார், ஜெயகாந்தன், பேராசியர் சி.ராணி, கௌரவ விரிவுரையாளர்கள் கு.முத்துக்கிருஷ்ணன், ஜெ.தேவி, எஸ்.அகிலா, மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 30 பேரிடம் இருந்து ரத்தத்தை தானமாகப் பெற்று, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைத்தனர்.