பேராவூரணி, அக் 10
பேராவூரணி டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு அக்ஷரப்யாசம் நடந்தது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, அகாடமிக் டைரக்டர் அஸ்வின்கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், கணபதி ஹோமம், வித்யா ஹோமத்தை தொடர்ந்து குழந்தைகள் எழுத்தறிவித்தலில் பெற்றோர்களுடன் குழந்தைகளுக்கு நெல்மணியில் தமிழ் உயிர் எழுத்தை எழுதி அறிமுகப்படுத்தினர். கழனிவாசல் குமார் குருக்கள் கலந்து கொண்டு விஜயதசமி சேர்க்கையில் கலந்து கொண்டு குழந்தைகளை ஆசீர்வதித்தார்கள்.
இதில் பள்ளி செயலாளர் நபிஷாபேகம், அறங்காவலர்கள் கணபதி, ஆனந்தன், ஆசிரியர்கள் மூர்த்தி, ரமாதேவி, அஞ்சுகாதேவி, பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.